தொழில்நுட்பச் செய்திகள்
மைக்ரோசாஃப்ட் எட்ஜ்

மாணவர்களுக்கு இனி ஜாலி தான்- மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Published On 2022-04-01 07:00 GMT   |   Update On 2022-04-01 07:00 GMT
எட்ஜ் எடிட்டர், வெப் செலக்ட் ஆகிய இரண்டு அம்சங்களை மைக்ரோசாஃப்ட் அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எட்ஜ் பிரவுசரில் கிராமர் எடிட்டர், ஸ்மார்ட் வெப் செலக்‌ஷன் இரண்டு புதிய அம்சங்களை கொண்டுவரவுள்ளது. இந்த அம்சங்கள் மாணவர்கள், அலுவலக பணியார்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

Microsoft Edge Editor- இதில் மைக்ரோசாஃப்ட் கிராமர் எடிட்டர், நாம் இணையத்தில் இமெயிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு பதிவோ எழுதும்போது அதில் உள்ள எழுத்து, இலக்கண பிழைகளை சுட்டிக்காட்டும். 

மேலும் அந்த வார்த்தைகளுக்கு மாற்றான சரியான வார்த்தைகளை பரிந்துரைக்கும். இந்த அம்சம் கிராமர்லிக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது. குறிப்பாக கிராமர்லியை நாம் பிரவுசரில் ஆட் ஆன் செய்ய வேண்டும். ஆனால் மைக்ரோசாஃப்டின் இந்த புதிய அம்சத்தை பிரவுசரில் ஆட் ஆன் செய்ய வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளது.

இந்த மைக்ரோசாஃப்ட் எட்ஜ் எடிட்டர் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. இருப்பினும் நாம் பிரவுசரை எந்த மொழியில் பயன்படுத்துகிறோமோ அதே மொழியில் தான் இந்த எடிட்டர் இயங்கும். இதுத்தவிர நாம் வார்த்தைகளை டைப் செய்யும்போது அடுத்த வார்த்தைகளை பரிந்துரை செய்யும் அம்சமும் இந்த வெப் எடிட்டர் சேவையில் இடம்பெற்றுள்ளது. தற்போது ஆங்கிலம், ஸ்பேஷிஷ், பிரெஞ்ச், இத்தாலி, போர்த்துகீஸ் ஆகிய மொழிகளில் உள்ள இந்த எடிட்டர் விரைவில் பிற மொழிகளிலும் வரவுள்ளது.

Web select - இந்த அம்சத்தின் மூலம் நாம் இணையத்தில் இருந்து எழுத்துக்களை எளிதாக காப்பி செய்ய முடியும். பொதுவாக இணையதளங்களில் டேபிள்களுக்குள் இருக்கும் வார்த்தைகளை காப்பி செய்து பேஸ்ட் செய்தால் அதில் உள்ள எழுத்துக்கள் முன்னுக்கு பின் களைந்து ஒழுங்கில்லாமல் இருக்கும். அதேபோல புகைப்படங்களை காப்பி செய்துவைக்கும்போது அது வார்த்தைகளுக்கு இடையே பொருந்தாது. ஆனால் இந்த வெப் செலக்ட் மூலம் நாம் ஒழுங்குமுறையாக வார்த்தைகளை காப்பி செய்துகொள்ளலாம். அல்லது ஸ்க்ரீன் ஷாட்டாகவும் சேவ் செய்து பயன்படுத்திகொள்ளலாம்.

இந்த இரண்டு அம்சங்களையும் பெற எட்ஜ் பிரவுசரை அப்டேட் செய்திருக்க வேண்டும்.
Tags:    

Similar News