செய்திகள்
படகு விபத்து (கோப்பு படம்)

பாரம் தாங்காமல் நைஜர் நதியில் கவிழ்ந்த படகு... 156 பேரை காணவில்லை

Published On 2021-05-27 05:18 GMT   |   Update On 2021-05-27 05:18 GMT
படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளதாகவும், பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர் என்றும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அபுஜா:

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில் இருந்து நைஜர் மாநிலத்தின் மலேலே நகரில் உள்ள சந்தைக்கு செல்வதற்காக 180 பயணிகள் படகு ஒன்றில் புறப்பட்டனர். நைஜர் ஆற்றில் சென்ற அந்த படகு, புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் 4 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்.  அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 20 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  காணாமல் போன 156 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுபற்றி தேசிய உள்நாட்டு நீர்வழி அமைப்பின் பகுதி மேலாளர் யூசுப் பிர்மா கூறும்பொழுது, ‘படகில் அதிக அளவில் பயணிகள் ஏற்றப்பட்டு உள்ளனர்.  பழைய மற்றும் பலவீனமடைந்த படகில் அவர்கள் பயணித்து உள்ளனர்.  பயணிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ளும்படி நாங்கள் கூறிய அறிவுரையை அவர்கள் கேட்கவில்லை.  படகில் 30 பஜாஜ் மோட்டார் சைக்கிள்களும் ஏற்றப்பட்டு உள்ளன. நாங்கள் இன்னும் மீட்பு பணியை தொடர்ந்து வருகிறோம். காணாமல் போன 156 பேரில் பலர் நீருக்கு அடியில் மூழ்கியிருக்கலாம்’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News