செய்திகள்
தேவ்தத் படிக்கல்

இந்தியாவுக்காக விளையாட படிக்கல்லுக்கு வாயப்பு இருக்கிறது: சவுரவ் கங்குலி

Published On 2020-11-08 13:21 GMT   |   Update On 2020-11-08 13:21 GMT
இந்திய அணிக்காக விளையாட தேவ்தத் படிக்கல்லுக்கு வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்காக தொடக்க வீரராக ஐபிஎல்-லில் விளையாடிய தேவ்தத் படிக்கல் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தினார். பெங்களூர் அணியில் அதிகபட்ச ரன்களை சேர்த்தவர் படிக்கல் மட்டுமே. இந்த ஐபிஎல்லில் 473 ரன்களை எடுத்துள்ளார். இது அந்த அணியின் தூண்களான கோலி, ஏபி டிவில்லியர்ஸைவிட அதிகம்.

ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ‘‘படிக்கல் திறமையான வீரர். டி20 கிரிக்கெட் என்பது அவருடைய முதல்கட்டம்தான். நான் அவர் ஈடன் கார்டனில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி பார்த்திருக்கிறேன். அந்தப் போட்டியில் மேற்கு வங்கமும், கர்நாடகமும் அரையிறுதியில் மோதியது.

அதில் படிக்கல் மிகச்சிறப்பாக விளையாடினார். வேகப்பந்து வீச்சாளர்களை லாவகமாக எதிர்கொண்டு விளாசுகிறார். இன்னும் சில சீசன்கள் போகட்டும் நிச்சயம் அணியில் இடம்பெறுவார். இந்தியாவுக்கும் தொடக்க வீரர்கள் தேவைப்படுகிறார்கள்’’ என்றார்.

மேலும் ‘‘ஐபிஎல் தொடர் பாதுகாப்பு வளையத்திற்குள் நடத்தி வெற்றிப்பெறும் என நினைக்கவே இல்லை. இதற்கு முன்பு இத்தகைய சூழலை எதிர்கொண்டதில்லை. ஆனால் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் நடத்தப்பட்டது எங்களுக்கு பெரிய பாடமாக இருந்தது. முதலில் சிஎஸ்கேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டபோது நாங்கள் பயந்துபோனோம். ஆனால் இப்போது எல்லாமே நல்லபடியாக நடந்து முடிய இருக்கிறது’’  என்றார்
Tags:    

Similar News