வழிபாடு
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்சதீப திருவிழா தொடக்கம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் லட்சதீப திருவிழா தொடக்கம்

Published On 2021-12-17 07:53 GMT   |   Update On 2021-12-17 07:53 GMT
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் 10 ஆயிரம் விளக்குகள் வீதம் வருகிற 25-ந் தேதி வரை 1 லட்சம் திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது.
தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 17-ம் ஆண்டு லட்சதீப திருவிழா நேற்றுமாலை தொடங்கியது. அரண்மனை தேவஸ்தான மேற்பார்வையாளர் செந்தில்குமரன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் முதல் திருவிளக்கை ஏற்றி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு திருவிளக்கை ஏற்றி வைத்தனர். முதல் நாளில் 10 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட்டன. முன்னதாக அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் விழாக்குழு தலைவர் முருகேசன், துணைத் தலைவர்கள் தனசேகர், மேத்தா, அமைப்பு செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் வேணு.கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக மங்கள இசையும், மாணவிகளின் பரதநாட்டியமும் நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலையில் 10 ஆயிரம் விளக்குகள் வீதம் வருகிற 25-ந் தேதி வரை 1 லட்சம் திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு நடைபெற உள்ளது. வருகிற 26-ந் தேதி மகாலட்சுமி ஹோமம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை லட்சதீப வழிகாட்டுக்குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News