செய்திகள்
கோப்புபடம்

டெலிகவுன்சிலிங் பணியில் இருந்து விடைபெற்ற கல்லூரி மாணவர்கள்

Published On 2021-07-19 09:11 GMT   |   Update On 2021-07-19 09:11 GMT
இனி மாநகராட்சி அலுவலர்களை வைத்தே ‘டெலி கவுன்சலிங்’ மையம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி என்.எஸ்.எஸ்., அலகு-2 மாணவர்கள் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தொற்று உறுதியானவர்களிடம் ‘வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்களா? மருந்து உட்கொண்டார்களா, சளி, இருமல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏதாவது இருக்கிறதா, மருத்துவ உதவி ஏதாவது தேவைப்படுகிறதா? என்று விசாரித்து ஆலோசனை வழங்கினர்.

கடந்த ஜூன்1-ந் தேதி தொடங்கி இம்மாதம் 16-ந்தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் காலை, மதியம், இரவு என 24 மணி நேரமும் கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் வழிகாட்டுதலில் மாணவர்கள் தொடர்ந்து செயல்பட்டனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தரவுகளும் குறைந்துவிட்டது. இனி மாநகராட்சி அலுவலர்களை வைத்தே ‘டெலி கவுன்சலிங்’ மையம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து கவுன்சிலிங் பணியில் ஈடுபட்டு சிறப்பாக செயல்பட்ட மாணவர்களை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் வாழ்த்தினார். 

மாணவ செயலர்கள் சந்தோஷ், கிருபாகரன், ரத்தின கணேஷ், அருள்குமார் ஆகியோர் தலைமையில் 3 சுழற்சிகளில் 31க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இதற்கான நோடல் அதிகாரியாக ராம்மோகன் செயல்பட்டார்.
Tags:    

Similar News