செய்திகள்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றியது இம்ரான் கட்சி

Published On 2020-11-18 03:06 GMT   |   Update On 2020-11-18 03:06 GMT
கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக தொகுதிகளை கைப்பற்றியது.
கில்கிட்:

இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் போராட்டக் குழுக்களின் எச்சரிக்கைக்கு மத்தியில், கில்கிட்-பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலை பாகிஸ்தான் நடத்தியது. 23 தொகுதிகள் கொண்ட இந்த பகுதியில், பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.

பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தன. மஜ்லிஸ் கட்சி ஒரு தொகுதியில் வென்றது. 7 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். 

ஆனால், ஆளுங்கட்சி கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 
Tags:    

Similar News