ஆன்மிகம்
முருகன்

இந்த வார விசேஷங்கள் 29.10.2019 முதல் 4.11.2019 வரை

Published On 2019-10-29 03:45 GMT   |   Update On 2019-10-29 03:45 GMT
அக்டோபர் 29-ம் தேதியில் இருந்து நவம்பர் 4-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
29-ந்தேதி (செவ்வாய்) :

* சிக்கல் சிங்கார வேலவர் நாகாபரண காட்சி, இரவு ஆட்டு கிடா வாகனத்தில் திருவீதி உலா.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு விருட்சபாரூடராய் பட்டினப் பிரவேசம்.
* குமாரவயலூர் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
* வள்ளியூர் முருகப்பெருமான் இரவு வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடு.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி சந்திரசேகரர் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

30-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேய சுவாமிக்கு வருசாபிஷேகம்.
* சிக்கல் சிங்கார வேலவர் காலை மோகன அவதாரம், இரவு தங்க மயில் வாகனத்தில் புறப்பாடு.
* வள்ளியூர் முருகப்பெருமான் காலை கேடய சப்பரத்திலும், இரவு பூங்கோவில் சப்பரத்திலும் பவனி.
* குமாரவயலூர் முருகப்பெருமான் விருட்ச வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

31-ந்தேதி (வியாழன்) :

* சதுர்த்தி விரதம்.
* சிக்கல் சிங்கார வேலவர் வேணுகோபாலர் திருக்கோலக் காட்சி, இரவு வெள்ளி விருட்ச வாகனத்தில் பவனி.
* குமாரவயலூர் முருகப்பெருமான் கஜமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல்.
* வள்ளியூர் முருகப்பெருமான் காலை ஏக சிம்மாசனத்திலும், இரவு யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்.

1-ந்தேதி (வெள்ளி) :

* முகூர்த்த நாள்.
* சிக்கல் சிங்காரவேலவர் ரத உற்சவம், இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
* குமாரவயலூர் முருகப்பெருமான் சிங்கமுகசூரனுக்கு பெருவாழ்வு தந்தருளல், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் பவனி.
* வள்ளியூர் முருகப்பெருமான் சண்முக உருகு பலகையில் தரிசனம். மூலவர் சொர்ண அங்கி சேவை. இரவு ஏக சிம்மாசனத்திலும் பஞ்சமூர்த்தி அலங்காரத்துடனும் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (சனி) :

* கந்தசஷ்டி விரதம், சூரசம்ஹாரம்.
* சிக்கல் சிங்கார வேலவர் தங்க ஆட்டு கிடா வாகனத்திலும், தாரக மற்றும் சிங்கமுக அசுரர்களை சங்கரித்து, சூரபத்மனை சம்காரம் செய்து இந்திர விமானத்திலும் பவனி.
* குமாரவயலூர் முருகப்பெருமான், பார்வதி தேவியிடம் சக்திவேல் வாங்குதல்.
* வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளை சாத்தி தரிசனம், மாலை பச்சை சாத்தி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* சகல முருகன் கோவில்களிலும் தெய்வானை திருக்கல்யாணம்.
* சிக்கல் சிங்கார வேலவர் காலை சூர்ணோற்சவம், மாலை தங்கக் குதிரையில் பவனி, இரவு தெய்வானையை மணந்து வெள்ளி ரதத்தில் காட்சி.
* குமாரவயலூர் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.
* வள்ளியூர் முருகப்பெருமான் கோ ரதத்தில் உலா, இரவு பல்லக்கு சேவை.
* திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

4-ந்தேதி (திங்கள்) :

* சிக்கல் சிங்கார வேலவர், வள்ளி- தெய்வானையை மணந்து இந்திர விமானத்தில் காட்சி தருதல்.
* வள்ளியூர் முருகப்பெருமான் ஏக சிம்மாசனத்தில் பவனி.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
Tags:    

Similar News