செய்திகள்
ஜப்பான் பிரதமர் ஷின்சோ உடன் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

ஜப்பான் பிரதமருடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு

Published On 2019-09-02 15:58 GMT   |   Update On 2019-09-02 16:32 GMT
ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
டோக்கியோ:

இந்தியா-ஜப்பான் இடையேயான வருடாந்திர பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஜப்பான் சென்றுள்ளார். அந்நாட்டுக்காக உயிர் நீத்த ஜப்பான் பாதுகாப்பு படை வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

இதையடுத்து, ஜப்பான் பாதுகாப்பு மந்திரி டேஷிக் இவாயா பாதுகாப்பு மந்திரிக்களுக்கான வருடாந்திர கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தின் போது பிராந்திய மற்றும் உலக அளவில் பாதுகாப்பு மற்றும் அமைதியை நிலைநிறுத்துதல், இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார் என கூறினார்.



பாதுகாப்பு மந்திரிகள் கூட்டத்தை முடித்த பின்னர் அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்த பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இருநாட்டு உறவு மற்றும் பாதுகாப்புத்துறையில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
Tags:    

Similar News