ஆன்மிகம்
திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் பெற வரிசையில் காத்திருந்த பக்தர்கள்

Published On 2020-12-25 02:33 GMT   |   Update On 2020-12-25 02:33 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்வதற்கான தரிசன டிக்கெட் பெற உள்ளூர் பக்தர்கள் ஆதார் அட்டையுடன் வந்து கவுண்ட்டர்களில் காத்திருந்தனர்.
திருமலை :

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக உள்ளூர் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணி, மகதி கலையரங்கம், மாநகராட்சி அலுவலக வளாகம், ராமாநாயுடு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, எம்.ஆர். பள்ளி புதிய மார்க்கெட் ஆகிய 5 இடங்களில் 50 கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்று காலை வழங்கப்பட்டன.

தரிசன டிக்கெட் பெற உள்ளூர் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதலே ஆதார் அட்டையுடன் வந்து கவுண்ட்டர்களில் காத்திருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 3-ந்தேதி வரை நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட்டுகள் வீதம் ஒரு லட்சம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News