ஆன்மிகம்
மகாலட்சுமி

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு விரதம் இருந்து பூஜை செய்வது எப்படி?

Published On 2020-09-04 06:03 GMT   |   Update On 2020-09-04 06:03 GMT
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி.
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள்தரும்.

லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை, பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி படத்தை அலங்கரிக்கவும். காலையில் ஸ்ரீமகாலட்சுமி படத்தை 12 அல்லது அதன் மடங்கு களில் வலம் வரவும். பால், பழம் அல்லது பாயாசம் நைவேத்தியம் செய்யவும். நெய் தீபம் ஏற்றவும்.

மகாலட்சுமி அஷ்டகம் அல்லது மகாலட்சுமி துதியை 3 முறை பாடவும். நைவேத்தியத்தை பெண் குழந்தைகளுக்கு (பிரசாதமாக) பகிர்ந்து கொடுக்கவும். இதையே ஆடி மாதம் செய்தால் அதன் பெயர்தான் வரலட்சுமி விரதம். ஆடி மாதம் செய்யும்போது வயதான சுமங்கலிகளை வர வழைத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவது நன்று.

Tags:    

Similar News