ஆன்மிகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை படத்தில் காணலாம்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன கட்டணம் குறைக்கப்படுமா?

Published On 2020-12-21 05:48 GMT   |   Update On 2020-12-21 05:48 GMT
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி தரிசன கட்டணத்தை பழைய நடைமுறை படி குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் மார்கழி மாதம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றவண்ணம் உள்ளனர். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை கோவில் பணியாளர்கள் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

வழக்கமாக கோவிலில் தரிசன கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டு வந்தது. சில முக்கிய விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது மட்டுமே ரூ.50 வசூலிக்கப்படும். ஆனால் சிறப்பு தரிசனம் கட்டணமாக தொடர்ந்து ரூ.50 வசூலிக்கப்பட்டு வருகிறது.

அதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி தரிசன கட்டணத்தை பழைய நடைமுறை படி குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News