செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்பு

தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்றார்

Published On 2019-09-08 05:41 GMT   |   Update On 2019-09-08 05:41 GMT
தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
ஐதராபாத்:

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆணை பிறப்பித்தார்.

இதையடுத்து, தலைவர் பதவி மற்றும் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார். 

இந்நிலையில், தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று பதவியேற்றார்.

ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.இந்த விழாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் பங்கேற்றார்.

மேலும், தமிழகம் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News