ஆன்மிகம்
பால் அபிஷேகம்

பலன்தரும் பால் அபிஷேகம்

Published On 2020-01-17 08:54 GMT   |   Update On 2020-01-17 08:54 GMT
மனதை ஒரு நிலைப்படுத்தி, பக்தியுடன் இறைவனை சிந்தித்தால் நாம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடைபெறும் என்பதால், பால்குடம் எடுக்கின்ற நேரத்தில் மனமுருகி ஆண்டவனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
மனிதர்கள் அனைவருமே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த நம்பிக்கையில் தன்னம்பிக்கையும், தெய்வ நம்பிக்கையும் அடங்கும். மனிதர்கள் ஒவ்வொருவரும் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடிவடைய வேண்டுமென்று, ஆண்டவனை வேண்டி பல்வேறு விதமான நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

அதில் பால்குடம் எடுப்பதும் ஒன்று. பால் வெள்ளை நிறமுடையது. எனவே பழகுபவர்கள் வெள்ளை மனடையவராக அமைந்து வெற்றியை தேடித் தரவேண்டி பிரார்த்தனை செய்வதற்கான பரிகாரம் இது. மேலும் தெய்வங்களை அபிஷேகத்தால் குளிர்ச்சிப் படுத்தினால், அவர்கள் மனம் குளிர்ந்து நமக்கு வரம் தருவார்கள் அல்லவா? எனவேதான் பால் அபிஷேகம், பலன் தரும் அபிஷேகமாக அமைகிறது.

அம்மன் கோவில் மற்றும் முருகன் கோவில்களில் வரும் விசேஷங்களுக்கு பால்குடம் எடுத்துச் சென்று வழிபாடு நடத்துகின்றனர். பக்தர்கள் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகக் கொண்டுவரப்படும் பால் குடங்களையும், மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டு தம்மை மறந்த நிலையில் ஆலயத்தை நோக்கிச் செல்கின்றனர். மனதை ஒரு நிலைப்படுத்தி, பக்தியுடன் இறைவனை சிந்தித்தால் நாம் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடைபெறும் என்பதால், பால்குடம் எடுக்கின்ற நேரத்தில் மனமுருகி ஆண்டவனை வழிபட்டால் பலன் கிடைக்கும்.
Tags:    

Similar News