செய்திகள்
அபராதம்

நாமக்கல்லில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 50 பேருக்கு அபராதம்

Published On 2021-07-16 10:12 GMT   |   Update On 2021-07-16 10:12 GMT
நாமக்கல்லில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் உத்தரவின்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசனுடன் இணைந்து நாமக்கல் பூங்கா சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தார். இதில் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், நம்பர் பிளேட்டில் விதிமுறை மீறல், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டுதல் என பல்வேறு விதிமுறை மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஏறத்தாழ 50 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி லைசென்ஸ் இல்லாமல் உரிமையாளர் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரமும், இதர நபர்கள் ஓட்டினால் ரூ.15 ஆயிரமும், புகை சான்று இல்லாவிட்டால் ரூ.10 ஆயிரமும், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News