செய்திகள்
ஆதார் அட்டை

தேசிய கல்வி உதவித்தொகை பெற ஆதார் விவரங்களை பதிவு செய்வது கட்டாயம்

Published On 2021-11-21 04:04 GMT   |   Update On 2021-11-21 04:04 GMT
சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆதார் விவரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது.
ராமநாதபுரம்:

தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது ஆதார் விவரங்கள் கட்டாயம் என்று கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.


தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற இணையம் மூலம் விண்ணப்பிக்கும்போது ஆதார் விவரங்கள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் ஆதார் விவரங்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கி உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஆதார் விவரங்களை பதிவு செய்த மாணவ, மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

இக்கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கக்கூடிய புதிய விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31 வரையிலும் மற்றும் புதுப்பிக்க கூடிய விண்ணப்பதாரர்கள் ஜனவரி 15 வரையிலும் ஆதார் விவரங்களை பதிவு செய்வதற்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News