செய்திகள்
ஜிஎஸ்டி

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.30 லட்சம் கோடியைத் தாண்டியது

Published On 2021-11-01 18:38 GMT   |   Update On 2021-11-01 18:38 GMT
அக்டோபர் மாத ஜி.எஸ்.டி. வருவாய், 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வருவாய் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: 

ஜி.எஸ்.டி வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அக்டோபர் மாதத்தில் ஜி.எஸ்.டி. மூலம் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த 4 மாதங்களாக ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 

மொத்த வருவாயில் மத்திய ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 23 ஆயிரத்து 861 கோடி ரூபாயும், மாநில ஜி.எஸ்.டி மூலம் ஈட்டப்பட்ட 30 ஆயிரத்து 421 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜி.எஸ்.டி. மூலம் ஈட்டப்பட்ட 67 ஆயிரத்து 361 கோடி ரூபாயும் அடங்கும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிடைத்த ஜிஎஸ்டி வருவாயை விட இந்தாண்டு அக்டோபார் மாதத்திற்கான வருவாய் 24  சதவீதம்  அதிகரித்துள்ளது. 2019-20-ம் ஆண்டில் அக்டோபரில் கிடைத்த வருவாயை விட 36 சதவீதம் அதிகமாகவும் உள்ளது என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News