ஆன்மிகம்
ஏழுமலையானுக்கு படைக்க வெண்ணையை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

பக்தர்கள் தயாரித்த வெண்ணைய் மூலம் திருப்பதியில் புதிதாக நவநீத சேவை தொடக்கம்

Published On 2021-08-31 08:55 GMT   |   Update On 2021-08-31 08:55 GMT
நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணெயை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை தொடங்கி தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்ட பல சேவைகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில் ஏழுமலையானுக்கு நவநீத சேவை என்ற பெயரிலான புதிய சேவை ஒன்றை கிருஷ்ண ஜெயந்தியான நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது.

இந்த சேவையில் நாட்டுப் பசுக்கள் மூலம் பெறப்படும் சுத்தமான வெண்ணை ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படும்.

இதற்காக 33 கீர் பசுக்கள், குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, திருப்பதி மலையில் உள்ள கோசாலையில் பராமரிக்கபடுகின்றன. நாட்டு பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பாலை தயிராக்கி அதன்மூலம் சம்பிரதாய முறையில் கடைந்தெடுத்த வெண்ணைய் நேற்று பெறப்பட்டது.

தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி ஆகியோர் உட்பட தேவஸ்தான அதிகாரிகள், கோசாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரை வெண்ணையை ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அந்த வெண்ணைய், கோவில் அர்ச்சகர்களிடம் வழங்கப் பட்டது. அர்ச்சகர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தி ஏழுமலையானுக்கு வெண்ணைய் சமர்ப்பித்தனர்.

நாளை முதல் திருப்பதி மலையில் சேவை அடிப்படையில் பணியாற்றும் ஸ்ரீவாரி சேவை தொண்டர்கள் கோசாலையில் இருந்து வெண்ணெயை ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் அர்ச்சகர்களிடம் சமர்ப்பிக்க உள்ளனர். வெண்ணை தயாரிக்கும் பணியிலும் ஈடுபடுவார்கள்.

இதன்மூலம் பக்தர்கள் தயாரித்த வெண்ணையும் ஏழுமலையானுக்கு தினமும் நவநீத சேவை மூலம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Tags:    

Similar News