ஆன்மிகம்
ஆவுடையம்பாள் சமேத நாறும்பூ நாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

ஆவுடையம்பாள் சமேத நாறும்பூ நாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

Published On 2021-03-22 06:08 GMT   |   Update On 2021-03-22 06:08 GMT
பணகுடி அருகே பழவூரில் அமைந்துள்ள ஆவுடையம்பாள் சமேத நாறும்பூ நாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பணகுடி அருகே பழவூரில் அமைந்துள்ள ஆவுடையம்பாள் சமேத நாறும்பூ நாதர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் கும்பாபிஷேகம், சுவாமி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் வெவ்வேறு சமுதாயத்தினர் சார்பில் பூஜைகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் (பொறுப்பு) மற்றும் செயல் அலுவலர் சுபாஷினி, திருவிழா பொறுப்பாளர்கள், மண்டகப்படி கட்டளைதாரர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.இதேபோல் வள்ளியூர் அருகே உள்ள சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் அபிஷேக பூஜையும், மதியம் கும்பாபிஷேக தீபாராதனை பூஜையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இரவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிக் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து குதிரையில் வன்னிக்குத்து நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந்தேதி காலையில் தேரோட்டமும், அதனை தொடர்ந்து குதிரை ஓட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Tags:    

Similar News