செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரம்

Published On 2021-09-11 07:15 GMT   |   Update On 2021-09-11 07:15 GMT
இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர்:

திருப்பூரில் நாளை 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 138 இடங்களிலும், புறநகரில் 29 இடங்கள் என மொத்தம் 167 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 18 வயதை கடந்த இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கலெக்டர் வினீத் அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:

மாநகரில் ஜனசக்திநகர், போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர், சக்தி நகர், கங்கா நகர், நேரு நகர், ஸ்ரீ நகர், கிறிஸ்டியன் காலனி, கஞ்சம்பாளையம், தென்னம்பாளையம், அம்பேத்கர் நகர், முத்தையன் நகர், கே.எம்.ஜி., நகர், செல்வி நகர், சுண்டமேடு, ஆத்துப்பாளையம், அண்ணாநகர், அண்ணா நெசவாளர் காலனி, தியாகிகுமரன் காலனி, அங்கேரிபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், பெரியார்காலனி.

முதலிபாளையம், செட்டிபாளையம், செவந்தம்பாளையம், விஜயாபுரம், சத்தியா காலனி, கே.வி.ஆர்., நகர், செல்லம்நகர், அய்யன்நகர், பூச்சக்காடு, செங்குந்தபுரம், வெடத்தலாங்காடு, ஈஸ்வரமூர்த்தி லே-அவுட், சாமுண்டிபுரம், வி.பி., சிந்தன்நகர், எம்.என்.எஸ்., நகர், எம்.ஜி.ஆர்., நகர், வீரபாண்டி, கருப்பகவுண்டம் பாளையம், பெரிச்சிபாளையம்.

ஆலாங்காடு, தியாகி குமரன் காலனி, ஜெயலட்சுமி நகர், சஞ்சய் நகர், ஏ.எஸ்., பண்டிட்நகர், குமரானந்தபுரம், கந்தசாமி லே-அவுட், மருதாசலபுரம், லட்சுமிநகர், மேட்டுப்பாளையம், ராமமூர்த்தி நகர், பத்மாவதிபுரம், நல்லூர், ஜெய்நகர், ஆர்.வி.இ., நகர், சேரன் நகர், துளசிராவ் வீதி, காட்டுவளவு, கரட்டாங்காடு, அரண்மனைப்புதூர்.

செம்மேடு, நொய்யல் வீதி, பாண்டியன் நகர், அண்ணா நகர், காமராஜ் நகர், நெருப்பெரிச்சல், ராக்கியகவுண்டன்புதூர், வாவிபாளையம், பூலுவப்பட்டி, நாதம்மாள் நகர், எம்.எஸ்., நகர் ராமு காலனி, எஸ்.வி., காலனி, திருநீலகண்டபுரம், பாரதி நகர், நெசவாளர் காலனி, திருமலை நகர்.

சூர்யாகிருஷ்ணா நகர், பெரியாண்டிபாளையம், முல்லை நகர், சின்னியகவுண்டன்புதூர், சின்னாண்டிபாளையம், முருகம்பாளையம், இடுவம்பாளையம், சூசையாபுரம், காதர்பேட்டை, முத்துசாமி வீதி, ராயாபுரம்.

காவிலிபாளையம், சந்திராபுரம், பாரப்பாளையம், செரங்காடு, சுகுமார் நகர், வெங்கடாசலபதி நகர், வ.உ.சி., நகர், வி.ஜி.வி., கார்டன், மண்ணரை, கருமாரம்பாளையம், அணைக்காடு, பி.கே.ஆர்., காலனி, சந்திரகாவி, கொங்கணகிரி.

இ.எஸ்.ஐ., மருத்துவமனை, சடையப்பன் கோவில் வளாகம், கலைமகள் வித்யாலயா, வி.கே., அரசு பள்ளி, ஆலங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளி, டி.எம்.எஸ்., நகர் ராகவேந்திரா ஸ்கூல், விநாயகா விகாஸ் பள்ளி, திலகர் நகர், அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், சோளிபாளையம், ரங்கநாதபுரம் ஆகிய நடுநிலைப்பள்ளிகள். 

டி.எஸ்.கே., பி.ஆர்.எம்.எச்., எல்.ஆர்.ஜி., 15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இவற்றுடன் திருப்பூர் பழைய, புதிய மற்றும் கோவில்வழி பஸ்  நிலையம், ரெயில்வே நிலையத்தில் முகாம் நடக்கிறது.

புறநகர் பகுதிகளில் அக்ரஹாரபுத்தூர், இடுவாய், பாரதிபுரம், சுல்தான்பேட்டை, புக்குளிபாளையம், பொன்னாபுரம், வெள்ளக்கரடு, ஹவுசிங் யூனிட், ஈட்டிவீரம்பாளையம், கணக்கம்பாளையம், பட்டம்பாளையம், சொக்கனூர், காளிபாளையம், பள்ளிபாளையம், வாஷிங்டன் நகர், அய்யம்பாளையம், தொரவலூர், மெய்யாண்டாம்பாளையம், அப்பியாபாளையம். 

முதலிபாளையத்தில் பெருமாநல்லூர், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நான்கு இடங்கள் ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது. 
Tags:    

Similar News