செய்திகள்
சேவாக்

நான் இவ்வளவு புகழ்பெற சவுரவ் கங்குலிதான் காரணம்: சேவாக்

Published On 2019-10-28 12:03 GMT   |   Update On 2019-10-28 12:03 GMT
நான் தற்போது இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு சவுரவ் கங்குலிதான் முக்கிய காரணம் என சேவாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் வீரேந்தர் சேவாக். 41 வயதாகும் இவர் 1999-ம் அண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக அறிமுகம் ஆனார். முதல் போட்டி அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.

அதன்பின் டெஸ்ட் போட்டியில் 2001-ல் அறிமுகம் ஆனார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருந்து சேவாக்கை தொடக்க வீரராக களம் இறக்கினார் அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி. தொடக்க வீரராக களம் இறங்கிய சேவாக் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் தனக்கொரு இடத்தை வகுத்துக் கொண்டார்.

தற்போதும் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்த பேட்ஸ்மேன் என்ற பெருமை கங்குலியால் கிடைத்தது என சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தரவரிசையில் இருந்து தொடக்க பேட்ஸ்மேனாக மாறுவதற்கு சவுரவ் கங்குலியின் பணி முக்கியமானது. அவர் என்னிடம் வந்து தொடக்க வீரராக களம் இறங்குகிறீர்களா? என்று கேட்ட பின்புதான் எல்லாமே மாறியது.

ஆனால் அவர் கேட்டதும், நீங்கள் ஏன் தொடக்க வீரராக களம் இறங்கவில்லை. உங்களுடன் தொடக்க வீரராக சச்சின் உள்ளாரோ? என்று என்னுடைய ரியாக்சன் எளிமையாக இருந்தது.

தொடக்க இடம் காலியாக இருப்பது குறித்து சவுரவ் கங்குலி என்னிடம் தெளிவாக எடுத்துக் கூறினார். நான் அந்த இடத்தில் களம் இறங்கி வியைாடினால், என்னுடைய நிரம் நிரந்தரம் என்பது உறுதியாக இருந்தது.

ஆனால், உங்களது யோசனைக்கு நான் எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க விரும்புகிறேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்றேன். அதற்கு கங்குலி, மிடில் ஆர்டர் வரிசையில் ஏதாவது ஒருவர் காயம் அடையும் வரை காத்திப்பேன் என்று தெரிவித்தார்.

அவர் முடிந்த அளவிற்கு என்னுடைய மனதை மாற்ற முயற்சி செய்தார். பின்னர், தொடக்க பேட்ஸ்மேன் வரிசையில் களம் இறங்கி பேட்டிங் செய்ய மூன்று அல்லது நான்கு வாய்ப்புகள் தருகிறேன். நீங்கள் அதில் ஜொலிக்காவிடில், தொடர்ச்சியாக விளையாடலாம்.



அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன், மிடில் ஆர்டர் தரவரிசையில் வாய்ப்பு வழங்குவேன் என்றார்.

இது மிகவும் நியாயமான அணுகுமுறை. கேப்டன் மீது வீரர்கள் நம்பிக்கை வைப்பதை இது தெளிவாக காட்டுகிறது. கங்குலி கொடுத்த உறுதி எனக்கு மிகப்பெரிய அளவில் நம்பிக்கை கொடுத்தது. எனது முன்னேற்றத்திற்குப் பின்னால் கங்குலி அதிக அளவில் இருந்தார். அதனால்  என்னால் முயற்சி செய்து பார்க்க முடிந்தது. தற்போது நான் இப்படி இருப்பதற்கு கங்குலிதான் காரணம்’’ என்றார்.
Tags:    

Similar News