ஆட்டோமொபைல்
பஜாஜ் செட்டாக்

பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் முன்பதிவு மீண்டும் நிறுத்தம்

Published On 2021-04-17 08:51 GMT   |   Update On 2021-04-17 08:51 GMT
பஜாஜ் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் முன்பதிவு சமீபத்தில் துவங்கிய நிலையில், இந்த மாடல் விற்று தீர்ந்துள்ளது.


பஜாஜ் நிறுவனம் தனது செட்டாக் எலெக்ட்ரிக் மாடலுக்கான முன்பதிவை சிறு இடைவெளிக்கு பின் சமீபத்தில் துவங்கியது. முன்பதிவு துவங்கிய இரண்டே நாட்களில் செட்டாக் மாடலின் அனைத்து யூனிட்களும் விற்று தீர்ந்தது. இதனால் இந்த மாடலுக்கான முன்பதிவு மீண்டும் நிறுத்தப்பட்டது.

குறுகிய காலக்கட்டத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டன என்ற விவரத்தை பஜாஜ் தெரிவிக்கவில்லை. கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த மாடலுக்கான முன்பதிவு அவ்வப்போது நிறுத்தப்பட்டு வந்தது. 



அதிக யூனிட்களை விரைந்து உருவாக்கும் பணிகளை பஜாஜ் சமீபத்தில் துவங்கியது. இதன் காரணமாக இந்த மாடலுக்கான விலையும் உயர்த்தப்பட்டது. அதன்படி செட்டாக் அர்பேன் மற்றும் பிரீமியம் மாடல்கள் விலை முறையே ரூ. 15 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் உயர்ந்து இருக்கிறது.

இந்த ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களும், 25 சதவீதம் சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும். செட்டாக் ஸ்கூட்டரை 3-பின் ஏசி 220 வோல்ட், 5ஏ கிரவுண்ட் வால் சாக்கெட் மூலம் சார்ஜ் செய்யலாம்.
Tags:    

Similar News