ஆட்டோமொபைல்
மஹிந்திரா XUV500

இந்தியாவில் ரி-லான்ச் ஆகும் மஹிந்திரா கார்

Published On 2021-05-12 08:35 GMT   |   Update On 2021-05-12 08:35 GMT
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல் விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது.

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் எஸ்யுவி மாடல்களை மாற்றியமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் பிரீமியம் வாகனங்களை பல்வேறு விலை பட்டியலில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அதன்படி XUV500 விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட இருப்பதாக மஹிந்திரா அறிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மஹிந்திரா தனது XUV500 மாடலை 2024 வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாடல் முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது சங்யோங் டிவோலி பிளாட்பார்மில் அதிக மாற்றங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.



டிவோலி பிளாட்பார்ம் அதிநவீன தரத்திற்கு மேம்படுத்தப்பட இருக்கிறது. டிவோலி பிளாட்பார்மை மேம்படுத்த மஹிந்திரா புதிய XUV700 மாடலை பயன்படுத்த இருக்கிறது. புதிய XUV500 மாடல் S301 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தற்போதைய XUV500 மாடலை விட அளவில் 300 எம்எம் சிறியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

மஹிந்திராவின் புதிய XUV500 இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் எம்ஜி ஆஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். 
Tags:    

Similar News