ஆட்டோமொபைல்
டொயோட்டா

இந்திய ஆலையில் படிப்படியாக பணிகளை துவங்கிய டொயோட்டா

Published On 2020-05-06 11:05 GMT   |   Update On 2020-05-06 11:05 GMT
டொயோட்டா நிறுவனம் இந்திய உற்பத்தி ஆலை பணிகளை படிப்படியாக துவங்கியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் மீண்டும் பணிகளை துவங்கியுள்ளது. பணியாளர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது. 

படிப்படியாக வாகன உற்பத்தி பணிகளை துவங்க டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் ஆலையில் உள்ள தரை முழுக்க கிருமிநாசினி பீய்ச்சி அடிக்கிறது. மீண்டும் பணிகளை துவங்குவதால், பணியாளர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.



உற்பத்தி பணிகள் மீண்டும் துவங்கப்பட்டாலும், இது முன்பை போன்று முழுவீச்சில் செயல்பட துவங்க இன்னும் சிறிதுகாலம் ஆகும் என கூறப்படுகிறது. உற்பத்தி சார்ந்த இதர பணிகளை மேற்கொள்ளும் இதர விநியோகஸ்தர்கள் உள்ள பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படாததே இதற்கு காரணம் ஆகும்.

முன்னதாக டொயோட்டா நிறுவனம் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள மத்திய அரசுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News