செய்திகள்
காஷ்மீர் தேர்தல்

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2020-12-01 04:04 GMT   |   Update On 2020-12-01 04:04 GMT
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் மொத்தமுள்ள 280 மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கான தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. 

இந்நிலையில், 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் 43 தொகுதிகளுக்கு நடைபெற்று வருகிறது. இதில் 25 தொகுதிகள் காஷ்மீரிலும், 18 தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன.

முன்னதாக 43 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 51.6 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. 8 கட்டங்களுக்கான தேர்தல்களும் வரும் 19-ம் தேதியுடன் முடிவடைகிறது.

பதிவான வாக்குகள் டிசம்பர் 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட கவுன்சில் தொகுதிகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் அசம்பாவித சம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் தேசியமாநாட்டுகட்சி, மக்கள் ஜனநாயக கட்சி இணைந்து அமைத்துள்ள குப்கர் கூட்டணி கட்சி, பாஜக, அப்னி கட்சி ஆகியவை முக்கிய
கட்சிகளாக களத்தில் உள்ளன.
Tags:    

Similar News