வழிபாடு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

மகா சிவராத்திரியையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நான்கு கால சாம பூஜை

Published On 2022-02-28 08:45 GMT   |   Update On 2022-02-28 08:45 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. சிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜைக்கும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை வழக்கமான பூஜைகள், தொடர்ந்து மகா சிவராத்திரியையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு பகவதி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு முதல் கால பூஜை, 12.30 மணிக்கு 2-ம் கால பூஜை, அதிகாலை 1 மணிக்கு 3-ம் கால பூஜை, 1.30 மணிக்கு 4-ம் கால பூஜை நடக்கிறது.

பூஜையின் போது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ சிறப்பு வழிபாடுகள், அலங்கார தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை அடைப்பு, தொடர்ந்து 4.30 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும். சிவராத்திரியையொட்டி ஒவ்வொரு கால பூஜைக்கும் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவார்கள்.

விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News