செய்திகள்
மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்ட காட்சி.

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

Published On 2021-10-08 08:30 GMT   |   Update On 2021-10-08 08:30 GMT
இன்று நடைபெற்ற முகாமில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் கோரிக்கைகள் குறித்து  கலெக்டரிடம் மனுக்கள் அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற முகா மில் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர் அவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அதிகாரிகளிடம் அளித்தனர். சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். இது கொரோனா தொற்று பரவலுக்கு வழிவகை ஏற்படுத்தி விடும்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணியாளர்கள் டேபிள்கள் போட்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து மனுக்கள் வாங்கி வருகின்றனர். இருப்பினும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகரித்து வருகிறது.

நீண்ட நேரம் மாற்றுத்திறனாளிகள் நிற்பதால் அவர்கள் சிரமத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News