ஆன்மிகம்
திருச்செந்தூர்

திருச்செந்தூர் திருத்தலம் பற்றி முனிவர்கள் கருத்து

Published On 2020-12-02 09:05 GMT   |   Update On 2020-12-02 09:05 GMT
திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயம் ஆறுபடை வீடுகளில் 2-வது சிறப்புக்குரியதாக இருக்கிறது. இந்த ஆலயத்தின் மகிமையைப் பற்றி சில புராண கால முனிவர்கள் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் ஆலயம் ஆறுபடை வீடுகளில் 2-வது சிறப்புக்குரியதாக இருக்கிறது. இந்த ஆலயம் பல மகான்கள் வந்து சென்ற பகுதியாக அறியப்படுகிறது. இந்த ஆலயத்தின் மகிமையைப் பற்றி சில புராண கால முனிவர்கள் கூறியிருப்பதை இங்கே பார்க்கலாம்.

வசிஷ்டர்:- இந்த பூமியில் மோட்சங்களைத் தரும் பல தலங்கள் இருந்தாலும், அவை யாவும் திருச்செந்தூர் தலத்திற்கு அடுத்தபடியாகத்தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

வாமதேவர்:- பிரம்மஹத்தி தோஷத்தால் பிடிக்கப்பட்டவனும், வேதங்களை பழித்தவனும்கூட, திருச்செந்தூரில் ஒருநாள் தங்கியிருந்தால் அவன் பரிசுத்தமானவனாக மாறிவிடுவான்.

ஜாபாலி:- திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆலயத்தில் உள்ள தீர்த்தத்தின் மகிமைக்கு ஈடாக, இந்த பூமியும் எதுவும் கிடையாது.

விசுவாமித்திரர்:- நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ததற்கான பலனை விட, திருச்செந்தூரில் வாழும் காலத்தில் கோடி பங்கு அதிகமாகப் பெறலாம்.

காசியபர்:- ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும், கார்த்திகை நட்சத்திரம் அன்று நீராடி பெறும் பலனை, ஒரே ஒரு முறை இந்த ஆலயத்தின் தீர்த்தத்தில் நீரா டுவதன் வாயிலாக ஒருவன் பெற்றுவிட முடியும்.

மார்க்கண்டேயர்:- ரிஷிகள் காசியில் ஒரு வருடம் தவம்செய்து பெறும் புண்ணியத்தை, திருச்செந்தூரில் ஒரே நாளில் அடைந்து விடலாம்.

மவுத்கல்யர்:- பல நாட்கள் செய்துவரும் தவத்தை, திருச்செந்தூர் முருகப்பெருமானை ஒரு முறை தரிசிப்பதன் மூலமாகவே பெற்றுவிட முடியும்.

குரு மகா திசை அல்லது குரு புக்தி குரூரமாக இருந்தால், அவர்கள் திருச்செந்தூர் வந்து ஆறுமுகனை தரிசித்து, ஆதிசங்கரரின் ‘சுப்ரமண்ய புஜங்கம்’ அல்லது குமரகுருபரரின் ‘கந்தர் கலிவெண்பா’வை ஒருமுறை பாராயணம் செய்தால் அனைத்து துன்பங்களும் நீங்கிவிடும்.
Tags:    

Similar News