செய்திகள்
கமல்ஹாசன்

இந்தி மொழி சிறிய குழந்தை - கமல்ஹாசன் கருத்து

Published On 2019-10-04 04:21 GMT   |   Update On 2019-10-04 04:21 GMT
இந்தி மொழி சிறிய குழந்தை. சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான் என்று கமல்ஹாசன் கூறினார்.
சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 500 மாணவிகளுக்கு மாதவிடாய் கால பெட்டகங்களை வழங்கும் நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மாணவிகளுக்கு பெட்டகங்களை வழங்கினார். ஒவ்வொரு பெட்டகத்திலும் 96 சானிடரி நாப்கின்கள், 6 பருத்தி உள்ளாடைகள் என ஒரு ஆண்டுக்கான பொருட்கள் இருந்தன.

பின்னர் அவர் அளித்த பேட்டியில் இந்தி திணிப்பு பற்றி கூறியதாவது:-

‘இந்தி மொழி டயாபருடன் இருக்கும் சிறிய குழந்தை. தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கை ஒப்பிடும்போது, இந்தி மொழி இன்னும் இளைய மொழிதான். இதை நான் ஏளனமாக கூறவில்லை. அதையும் நாம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கறையில் சொல்கிறேன். அதற்காக அதை திணிக்கக் கூடாது.’

இவ்வாறு அவர் கூறினார்.



கடந்த செப்டம்பர் 16-ந்தேதி இந்தி மொழி திணிப்பு குறித்து கமல்ஹாசன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், ‘இந்தி மொழியை திணித்தால், ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட பல மடங்கு பெரிதான போராட்டம் நடைபெறும்’ என்று பேசியிருந்தார்.

Tags:    

Similar News