செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

புரெவி புயல் வலுவிழந்தது: அமைச்சர் உதயகுமார்

Published On 2020-12-03 14:40 GMT   |   Update On 2020-12-03 14:40 GMT
புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும் எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
புரெவி புயல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதனால் தென்தமிழகத்தில் காற்றுடன் கனமழை பொழியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயகுமார் தென்காசி மாவட்டத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது உதயகுமார் ‘‘தற்போதைய நிலவரப்படி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாகவும், காற்றுடன் மழைப்பொழிவு இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

புயல் கரையை கடக்க இருப்பதை அடுத்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News