ஆன்மிகம்
தேரோட்டம் நடந்ததையும், அதை காண திரண்டு இருந்த பக்தர்களையும் படத்தில் காணலாம். (உள்படம்: சாமி-அம்பாள்)

பூதப்பாண்டி பூதலிங்கசாமி கோவில் தேரோட்டம்

Published On 2021-01-28 03:46 GMT   |   Update On 2021-01-28 03:46 GMT
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தைத் திருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பூதப்பாண்டி பூதலிங்கசாமி, சிவகாமி அம்பாள் கோவிலில் தைத் திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.

9-ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை 9.35 மணிக்கு விநாயகர், சாமி, அம்பாள் ஆகியோர் தேரில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து 9.55 மணிக்கு தேரோட்டத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ஆஸ்டின் எம்.எல்.ஏ., இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு தலைவர் சிவகுற்றாலம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

தேர், ரத வீதிகள் வழியே வந்தது. அங்கு திரளானபக்தர்கள் பங்கேற்று சாமியை தரிசனம் செய்தனர். தேர் பகல் 2.35 மணிக்கு நிலையை அடைந்தது.

இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் தோவாளை தாசில்தார் ஜூலியன் ஹீவர், பூதப்பாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் மகராஜன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், பா.ஜனதா .மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கலிங்கம், தோவாளை ஒன்றிய பொதுச்செயலாளர் விஜய் மணியன், பூதை மண்டல தலைவர் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாராயணமூர்த்தி, தோவாளை ஒன்றிய தலைவர் மகாதேவன், வர்த்தகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் ரெங்கநாதன், பூதை பேரூர் தலைவர் கோ.சி.சுந்தர், செயலாளர் ஆலிவர் தாஸ், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தேரோட்டத்தையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பூதப்பாண்டி பேருராட்சி சார்பில் அனைவருக்கும், முக கவசம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News