செய்திகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ரூ.1.15 கோடி மதிப்பில் புதிய தீயணைப்பு அலுவலகம்

Published On 2021-10-12 10:09 GMT   |   Update On 2021-10-12 10:09 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.
மதுரை:

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரம் பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீர வசந்த ராயர் மண்டபம் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

இதனைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி மேலச்சித்திரை வீதியில் உள்ள கார் நிறுத்துமிடம் பகுதியில் தற்காலிக தீயணைப்பு அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.1.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

இதற்காக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு கிழக்கு சித்திரை வீதி சந்திப்பில் உள்ள வேளாண் மண்பரிசோதனை மைய கட்டிடத்தை ரூ.1.65 லட்சம் செலவில் இடிக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த பணி ஒரு மாதத்தில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு இங்கு 12 சென்ட் மனையில் முதல் தளத்துடன் கூடிய தீயணைப்பு அலுவலகம் கட்டப்பட உள்ளது.


Tags:    

Similar News