தொழில்நுட்பச் செய்திகள்
ஐபோன் 15.4

வெறும் 10 நிமிடத்தில் முழு சார்ஜும் காலி- ஐபோன் பயனர்கள் புகார்

Published On 2022-03-21 05:00 GMT   |   Update On 2022-03-21 05:00 GMT
ஆப்பிள் வெளியிட்டுள்ள இந்த புதிய ஐஓஎஸ் அப்டேட்டினால் ஐபோன் பயனர்கள் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
ஆப்பிள் நிறுவனம் கடந்த 14-ஆம் தேதி iOS 15.4 அப்டேட்டை வெளியானது.

மாஸ்க் போட்டிருந்தாலும் ஃபேஸ் ஐடியை பயன்படுத்தி ஐபோனை அன்லாக் செய்யும் அம்சம் உட்பட நூற்றுக்கணக்கான அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், இந்த அப்டேட்டில் பல சிக்கல் இருப்பதாக ஐபோன் பயனர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த அப்டேட்டிற்கு பிறகு பேட்டரி சார்ஜ் விரைவா குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் பயனர்கள் போனை 97 சதவீதம் வரை சார்ஜ் செய்த பின், சார்ஜிலிருந்து எடுத்தால் பேட்டரி 100 சதவீதம் காட்டுவதாகவும், 5 நிமிடத்திற்கு பிறகு அல்லது போனை ரீ-ஸ்டார்ட் செய்தவுடனேயே பேட்டரி திறன் குறைந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். சிலருக்கு வெறும் 10 நிமிடத்தில் சார்ஜ் முழுதும் இறங்கிவிடுவதாகவும் கூறப்படுகிறது. 

இந்த புகார்களுக்கு  ஆப்பிள் நிறுவனம் இன்னும் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய ஐஓஎஸ்15.4 அப்டேட் ஐபோன் 13, ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12, ஐபோன் 12 மினி, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ், ஐபோன் Xs, ஐபோன் Xs Max, ஐபோன் Xr, ஐபோன் எக்ஸ், ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ் ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் எஸ்.இ (1வது தலைமுறை), ஐபோன் எஸ்.இ (2வது தலைமுறை), ஐபாட் டச் (7வது தலைமுறை) ஆகிய ஆப்பிள் மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News