லைஃப்ஸ்டைல்
தியானம்

நமது அன்றாட வாழ்க்கையில் மூலாதார தியானம்

Published On 2021-11-25 02:33 GMT   |   Update On 2021-11-25 02:33 GMT
நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும்.
விரிப்பில் அமர்ந்து நிமிர்ந்து உட்காரவும், முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை ஒரு இருபது வினாடிகள் தியானிக்கவும். பின் மிக மெதுவாக இரு நாசிவழியாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்களது மனதை முதுகுத்தண்டின் கடைசி கீழ் பகுதி உள் பகுதியில் நிலைநிறுத்தவும். இயல்பாக நடக்கும் மூச்சை அந்த இடத்தில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். ஐந்து நிமிடம் உங்களது உணர்வை முதுகு தண்டு கடைசி உள் பகுதியில் நிலை நிறுத்தவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

இந்த மூலாதார சக்கரா தியானம் கோனாடு சுரப்பியை கட்டுப்படுத்துகின்றது. கோனாடு சுரப்பி சிறுநீரகம், சிறுநீரகப்பையை கட்டுப்படுத்துகின்றது. இந்த இடத்தில் தியானம் செய்யும் பொழுது மூச்சை நினைக்கும் பொழுது நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைக்கும். அதனால் சிறுநீரகம் நன்கு பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. அடிக்கடி சிறுநீர் கழிப்பது சரி செய்யப்படுகின்றது.

நமது அன்றாட வாழ்க்கையில் மூலாதார தியானம்

காலை முதல் இரவு வரை உழைத்துக் கொண்டே இருக்கின்றோம். நிறைய நபர்களுக்கு நேரம் கிடைப்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கின்றது. அவர்கள் நேரம் கிடைக்கும் பொழுது, அலுவலகம், பஸ்சில் அல்லது காரில் செல்லும்பொழுது கண்களை மூடி உங்களது மனதை, மூச்சை முதுகுத்தண்டின் கடைசி கீழ்ப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். யாரையாவது பார்ப்பதற்கு சென்றால், காத்திருக்க சொன்னால், அமர்ந்திருக்கும் பொழுது மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் கண்களை திறந்தவாரே உங்களது மூச்சை, உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து தியானிக்கவும்.

இரவு படுப்பதற்கு முன்பாக விரிப்பில் அமர்ந்து கண்களை மூடி பிராண முத்திரையில் உங்களது உணர்வை முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். காலை எழுந்தவுடன் இதே போல் ஐந்து நிமிடம் தியானிக்கவும். அலுவலகத்திற்கு பத்து நிமிடத்திற்கு முன்பு சென்றால் அந்த நேரத்தை நாற்காலியில் அமர்ந்து முதுகு தண்டின் கடைசி உள் பகுதியில் வைத்து ஐந்து நிமிடம் தியானிக்கவும். நல்ல பிராண சக்தி அந்த இடத்தில் கிடைப்பதாக எண்ணவும். இப்படி கிடைக்கின்ற நேரத்தை சரியாகப் பயன்படுத்தினால் ஒரு நாளில் பத்து முறை இந்த மூலாதார சக்கரா தியானத்தை நம்மால் செய்ய முடியும். நிச்சயம் சிறுநீரகம், சிறு நீரகப்பை நன்கு இயங்கும்.

காலை 6 மணி முதல் 6 .20 மணிக்குள் சூரிய தியானம்

காலை 6 மணிக்கு சூரியன் உதயமாகி வரும்பொழுது சூரிய ஒளி நமது உடலில் படும்படி அமர்ந்து சக்தி முத்திரையில் இருக்கவும். இதனை வாரம் மூன்று நாட்கள் சூரிய ஓளி மேல்படும்படி பயிற்சி செய்யவும்.

இதேபோல் மாலை சூரியன் மறையும் நேரம் 5.30 மணி முதல் 6 மணிக்குள் சூரிய ஓளி உடம்பில் படும்படி பிராண முத்திரையை மட்டும் செய்யவும். சூரிய ஓளி நமது உடலில் படும்படி ஒரு முத்திரையை பயிற்சி செய்யும் பொழுது மிக நல்ல பலன் கிடைக்கும். நமது உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறும். உடல் இயக்கம் நன்றாக இருக்கும்.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Tags:    

Similar News