செய்திகள்
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மிக்கு தடை: மீறினால் 6 மாதம் சிறை- அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

Published On 2020-11-20 15:10 GMT   |   Update On 2020-11-20 16:49 GMT
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளை தடைசெய்யும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம் மூலம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் அவல சூழ்நிலை ஏற்பட்டது. பல இளைஞர்கள் பணத்தை இழப்பதோடு, உயிர்களை மாய்த்துக் கொண்டதால் உடனடியாக தடைசெய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இதற்கிடையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்திருந்தார். அதன்படி ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு இன்று தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனால் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படுகிறது. மீறி விளையாடினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 6  மாதம் தண்டனையும் விதிக்கப்படும். ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். ஆன்லைன் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனை தடுக்கப்படும். பணம் வைத்து விளையாடுபவர்கள், கணிணி, உபகரணங்கள் தடை செய்ய சட்டத்தில் வழிவகை உள்ளது.
Tags:    

Similar News