தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி நார்சோ 50

ரூ.12,999 விலையில் அறிமுகமான ரியல்மி நார்சோ 50

Published On 2022-02-24 11:21 GMT   |   Update On 2022-02-24 11:21 GMT
இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி பகல் 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல்மி நிறுவனம் புதிய நார்சோ 50 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனில் 6.6-inch FHD+ டிஸ்பிளே, 2414 X 1080 பிக்ஸல் ரெஷலியுசன், 180Hz டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 90.8 சதவீதம் ஸ்கிரீன் டூ பாடி ரேட்சியோவுடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த போன் MediaTek Helio G96 chipset பிராசஸரை கொண்டுள்ளது.  கேமராவை பொறுத்தவரை 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 2 மெக்காபிக்ஸல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்ஸல் பிளாக் அண்ட் ஒயிட் லென்ஸ் கொண்ட 3 பின்புற கேமராக்கள், 16 மெகாபிக்ஸல் செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 5000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



ரியல்மி யு.ஐ.2.0-ஐ அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ்.ஸில் இயங்கும் இந்த போனில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1 ஜிபிஎஸ், டைப்-சி சார்ஜிங் ஆகியவை தரப்பட்டுள்ளன.

இந்த போனின் 4 ஜிபி ரேம்+64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.12,999-ஆகவும், 6 ஜிபி+128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.15,499-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போன் வரும் மார்ச் 3-ம் தேதி 12 மணி முதல் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா மற்றும் ரியல்மி இணையதளத்தில் இந்த போனை வாங்கலாம்.
Tags:    

Similar News