தொழில்நுட்பம்
மோட்டோ இ6எஸ்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ இ7 ரென்டர்கள்

Published On 2020-05-14 06:39 GMT   |   Update On 2020-05-14 06:39 GMT
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ7 ஸ்மார்ட்போனின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சந்தையில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், மோட்டோரோலாவின் புதிய பட்ஜெட்  ரக ஸ்மார்ட்போன் விவரங்கள் மற்றும் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது மோட்டோ இ6எஸ் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போன் என்றும் இது மோட்டோ இ7 பெயரில் அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோல் டிவைஸ் கேட்டலாக் மற்றும் ஆண்ட்ராய்டு என்டர்பிரைஸ் பரிந்துரைக்கும் சாதனங்கள் பட்டியலிலும் இடம்பெற்று இருந்தது. அதன்படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில்:



- 6.2 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே
- 2 ஜிபி / 4 ஜிபி ரேம்
- 32 ஜிபி / 64 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
- 13 எம்பி பிரைமரி கேமரா
- 2 எம்பி ஆம்னிவிஷன் டெப்த் கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- 3550 எம்ஏஹெச் பேட்டரி  

உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. புதிய மோட்டோரோலா ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக வட அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பின் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இதன் விலை மற்றும் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News