செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட் பயாஸ் ஒரு மாதம் பரோலில் வெளியில் வந்த போது எடுத்த படம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி ராபர்ட் பயாஸ் ஒரு மாதம் பரோலில் சென்றார்

Published On 2019-11-26 02:24 GMT   |   Update On 2019-11-26 02:24 GMT
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயாஸ் தனது மகனின் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் சென்றார்.
செங்குன்றம் :

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் ராபர்ட் பயாஸ், தனது மகன் தமிழ்கோவின் திருமண ஏற்பாடுகளை செய்ய பரோல் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் சுந்தரே‌‌ஷ், ஆர்.எம்.டி. டிக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு அந்த மனு மீது விசாரணை நடத்தியது. பின்னர் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக்கூடாது. அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கக்கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் நவம்பர் 25-ந்தேதி(அதாவது நேற்று) முதல் டிசம்பர் 24-ந்தேதி வரை ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று ராபர்ட் பயாஸ், புழல் சிறையில் இருந்து பரோலில் சென்றார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனி வேன் மூலம் அவர், சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வக்கீல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News