செய்திகள்
கோப்புபடம்

அவினாசியில் மீண்டும் அதிகரிக்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு

Published On 2021-09-14 05:35 GMT   |   Update On 2021-09-14 05:35 GMT
பாலிதீன் பயன்பாடு கட்டுக்குள் இருந்த சமயத்தில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவும் குறைந்திருந்தது.
அவினாசி:

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக், பாலிதீன் கவர்களுக்கு  தடை அமலானபோது அவிநாசி மேற்கு ரத வீதியில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் பாத்திரம் எடுத்து வந்து இறைச்சி வாங்குவோருக்கு முட்டை இலவசமாக வழங்கப்பட்டது. 

ஒரு கட்டத்தில் பாத்திரம் கூட இலவசமாக வழங்கினர். அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சார்பில் தினமும், கடைகளில் சோதனை நடத்தப்பட்டு பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் பாலிதீன் புழக்கம் சில மாதங்களாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதுகுறித்து உள்ளாட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில்:

பாலிதீன் பயன்பாடு கட்டுக்குள் இருந்த சமயத்தில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவும் குறைந்திருந்தது. குப்பையை தரம் பிரிப்பது, அகற்றுவது எளிதாக இருந்தது. சமீப நாட்களாக வீடு, கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை கழிவுகளில் பிளாஸ்டிக் நிரம்பியுள்ளது என்றனர்.
Tags:    

Similar News