செய்திகள்
மீட்கப்பட்ட அம்மன் சிலை

கும்பகோணத்தில் மீட்கப்பட்ட அம்மன் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு

Published On 2020-01-09 10:30 GMT   |   Update On 2020-01-09 10:30 GMT
சேலம் அருகே சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றிய பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்கால அம்மன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
கும்பகோணம்:

சேலம் கெங்கவல்லியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ராஜசேகரன் என்பவர் ஒன்றே முக்கால் அடி மற்றும் ஆறு அரைகிலோ எடைகொண்ட பஞ்சலோக சிலையை வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராஜசேகரன் இல்லத்திலிருந்து அம்மன் சிலையை கைப்பற்றினர்

விசாரணையில் அவர் வெளிநாட்டிற்கு அம்மன் சிலையை விற்க முயன்றதாக தெரியவந்தது மேலும் அந்த அம்மன் சிலை பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து சிலை என்பது தெரியவந்தது இதையடுத்து சிலை கடத்தல் வழக்குகளை ஒருங்கிணைந்து விசாரிக்கப்படும் கும்ப கோணம் நீதிமன்றத்தில் அந்த அம்மன் சிலை கொண்டு வரப்பட்டு நீதிபதி முன் ஒப்படைக்கப்பட்ட அந்த சிலை பின்னர் பாதுகாப்பாக நாகேஸ்வரன் கோவில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
Tags:    

Similar News