உள்ளூர் செய்திகள்
நிலக்கடலை விதைப்பண்ணையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.

நிலக்கடலை விதை பண்ணையில் வேளாண்மை அதிகாரி ஆய்வு

Published On 2022-04-17 07:01 GMT   |   Update On 2022-04-17 07:01 GMT
நசியனூர் அடுத்த வேட்டுவபாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அப்புசாமி என்பவர் தோட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.
நசியனூர் அடுத்த வேட்டுவபாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அப்புசாமி என்பவர் தோட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.

ஈரோடு அருகே உள்ள நசியனூர் அடுத்த வேட்டுவபாளையத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அப்புசாமி என்பவர் தோட்டத்தில் நிலக்கடலை விதைப்பண்ணை அமைத்துள்ளார். இந்த பண்ணையை ஈரோடு மாவட்ட வேளாண் மை இணை இயக்குநர் சி.சின்னச்சாமி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: இந்த பகுதியில் நிலக் கடலை கதிரி லெப் பாக்சி (மு.1812) என்ற ரக ஆதார நிலை விதைப் பண்ணை 2 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது.

நிலக்கடலை விதைப்பு, விதை உருளை மூலம் செய்யப்பட்டது. சொட்டு நீர்ப் பாசன முறையில் நீர்ப் பாசனம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த தோட்டத்தில் வேளாண்மை துறையால் பரிந்துரைக்கப்பட்ட உரங்கள் இடப்பட்டன. வழக்கமாக நிலக்கடலை செடியில் 30-40 காய்கள் இருக்கும்.

இந்த விதைப்பண்ணையில் செடிக்கு 100-120 காய்கள் வரை உள்ளது. களைகளை கட்டுப்படுத்த களைகளை நீக்கும் கருவி, ஜிப்சம் வயலில் இட்டு மண் அணைக்க சிறிய வகை கருவியையும் பயன்படுத்தினார்.

மேலும் நிலக்கடலையை அறுவடை செய்த பின்னர் செடிகள், காய்களை பிரிக்க எந்திரத்தினை பயன்படுத் தினார். எனவே ஆட்கள் பற்றாக்குறை நிலவும் காலங்களில் இவர் பலவகை எந்திரங்களை பயன்படுத்தி உள்ளார். 

இந்த ரகமானது  பூச்சி, நோய் தாங்கும் திறன் கொண்டது. இதனால் பூச்சி மருந்துகளை பயன்படுத்து வதை தவிர்க்கலாம். மேலும் அறுவடை சமயத்தில் செடிகள் பச்சை யாக உள்ளதால் கால்நடைகள் இதை மிகவும் விரும்பும் வகையில் உள்ளது.

எனவே இந்த கதிரி மு.1812  என்ற புதிய நிலக் கடலை ரகமானது அனைத்து நல்ல சிறப்பு இயல்புகளையும் கொண்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் அதிக விதைப் பண்ணைகள் அமைத்து விதைகள் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News