ஆட்டோமொபைல்

ஒரு வருடத்தில் 100 பேர் வாங்கிய டுகாடி மோட்டார்சைக்கிள்

Published On 2019-04-03 10:38 GMT   |   Update On 2019-04-03 10:38 GMT
டுகாடி இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் 100 பேர் மான்ஸ்டர் 821 மோட்டார்சைக்கிள்களை வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. #DucatiMonster821



டுகாடி இந்தியா நிறுவனம் இந்தியாவில் ஒரு வருடத்திற்குள் சுமார் 100 டுகாடி மான்ஸ்டர் 821 மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருப்பதாக அறிவித்துள்ளது. 

இந்தியாவில் டுகாடி மான்ஸ்டர் 821 மோட்டார்சைக்கிள் மே 1, 2018இல் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்போர்ட்-நேக்டு மோட்டார்சைக்கிளாக மான்ஸ்டர் 821 இருக்கிறது. இத்தகைய வரவேற்பை கொண்டாடும் வகையில் டுகாடி மான்ஸ்டர் வாங்குவோருக்கு சிறப்பு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

இச்சலுகை ஏப்ரல் 1 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அனைத்து டுகாட்டி விற்பனையகங்களிலும் வழங்கப்படுகிறது. சிறப்பு சலுகையின் மூலம் மான்ஸ்டர் 821 வாங்குவோருக்கு டெர்மிக்னோனி எக்சாஸ்ட், டுகாடி க்விக் ஷிஃப்ட் (DQS) ஸ்டான்டர்டு உபகரணமாக வழங்கப்படுகிறது. இத்துடன் மான்ஸ்டர் 797 பிளஸ் வாங்குவோருக்கு டெர்மிக்னோனி எக்சாஸ்ட் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. 



இரு உபகரணங்களும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. இந்தியாவில் டுகாடி மான்ஸ்டர் 821 விலை ரூ.10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் மான்ஸ்டர் 797 பிளஸ் விலை ரூ.8.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டுகாடி மான்ஸ்டர் 821 மாடலில் 821சிசி டெஸ்டஸ்டிரெடா எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 108 பி.ஹெச்.பி. @9250 ஆர்.பி.எம். மற்றும் 86 என்.எம். டார்க் @7750 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது.

மான்ஸ்டர் 797 பிளஸ் மாடலில் 803சிசி எல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 86 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. டுகாடி மான்ஸ்டர் 821 டிரையம்ப் ஸ்டிரீட் டிரிபிள் ஆர்.எஸ்., சுசுகி ஜி.எஸ்.எக்ஸ்.-எஸ்750 மற்றும் கவாசகி இசட்900 போன்ற மாடல்களுக்கு போட்டியாக இருக்கிறது.
Tags:    

Similar News