செய்திகள்
நவீன கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள படுக்கைகள்

முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது

Published On 2020-08-15 11:15 GMT   |   Update On 2020-08-15 11:15 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்த கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டிற்கு வந்தது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் ராணியார் அரசு மருத்துவமனை, பழைய அரசு மருத்துவமனை, மன்னர் கல்லூரி ஆகிய இடங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மகளிர் கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் உள்ளது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.24 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையம் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதேநேரத்தில் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உமாமகேஸ்வரி, டீன் பூவதி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் தொடங்கி வைத்த கொரோனா சிறப்பு சிகிச்சை ஒப்புயர்வு மையம் பயன்பாட்டிற்கு வந்தது.

இது தொடர்பாக டீன் பூவதி கூறும்போது, இந்த புதிய மையத்தில் 350 படுக்கைகளும், அதிதீவிர சிகிச்சைகளுக்காக 35 படுக்கைகளும், 165 படுக்கைகள் ஆக்சிஜன் வசதிகளுடனும், 15 தனி அறை வசதிகளும், 3 அதிநவீன சிகிச்சை அரங்குகளும், வென்டிலேட்டர் கருவிகளும், திரவநிலை ஆக்சிஜனை சேமிக்க கூடிய கொள்கலன் உள்ளிட்டவைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா அறிகுறியுடன் மற்ற நோயுள்ளவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்படும். அறுவை சிகிச்சை அரங்குகளும், பிரச் வார்டுகளும் உள்ளன. மேலும் கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க யோகா பயிற்சி அரங்கமும் உள்ளது. புதிதாக தொற்று ஏற்படுபவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள நவீன கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. மேலும் கொரோனா நோயாளிகள் பொழுதுபோக்க அறைகளில் டி.வி. வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளது என்றார்.
Tags:    

Similar News