இந்தியா
கொரோனா தடுப்பூசி

தடுப்பூசி போடாத சிறுவர்கள் பள்ளிக்கு வரமுடியாது - அரியானா அமைச்சர் அதிரடி

Published On 2022-01-15 11:10 GMT   |   Update On 2022-01-15 11:10 GMT
தேவை மற்றும் கோரிக்கையின் அடிப்படையில் இரவு 10 மணி வரை தகுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சண்டிகர்:

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  

இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 150 கோடிக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3-ம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இதுவரை 2 கோடிக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரியானா அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News