செய்திகள்
குழந்தைகள் பாதுகாப்பு கூட்டத்தில் கலெக்டர் பிரவீன் நாயர் பேசியபோது எடுத்தபடம்.

நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் - கலெக்டர் தலைமையில் நடந்தது

Published On 2019-11-04 18:10 GMT   |   Update On 2019-11-04 18:10 GMT
நாகையில் குழந்தைகள் பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் பிரவீன் நாயர் தலைமையில் நடந்தது.
நாகப்பட்டினம்:

நாகை கலெக்டர் அலுவலகத்தில், சமூகபாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன், மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலியல் வன்கொடுமைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு தொடர்புடைய துறையின் மூலம் உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்க வேண்டும்.

குழந்தைகள் இல்லங்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பழங்குடியினர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு தொடர்புடையதுறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழுவை நாகைக்கு மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வது என கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு தலைவர் அய்யப்பன் மற்றும் குழந்தைகள் நலன் தொடர்புடைய அரசு அலுவலர்கள், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், தொண்டு நிறுவன இயக்குனர்கள், குழந்தைகள் இல்ல நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News