ஆன்மிகம்
நாகராஜா கோவிலில் பக்தர்கள் கூட்டத்துக்கு மத்தியில் பாலமுருகன் சாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றபோது எடுத்த படம்

முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2019-11-04 04:48 GMT   |   Update On 2019-11-04 04:48 GMT
குமரி மாவட்ட முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தசஷ்டி விழா கடந்த 28-ந் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. சூரபத்மனை, முருகப்பெருமான் வதம் செய்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.

நாகர்கோவிலில் புகழ்பெற்ற கோவிலாக திகழும் நாகராஜா கோவிலில் உள்ள பாலமுருகன் சாமிக்கு திருக்கல்யாணத்தை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் காலை 10 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் ஆரல்வாய் மொழி, தோவாளை செக்கர் கிரி, மருங்கூர், வேளிமலை, வெள்ளிமலை, தேரிவிளை குண்டல், பெருவிளை முருகன் கோவில்களிலும் திருக் கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோவில் களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. மேலும் சில கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.
Tags:    

Similar News