உள்ளூர் செய்திகள்
அங்கமங்கலம் பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் மரக்கன்றுகளை நட்ட போது எடுத்த படம்.

அங்கமங்கலம் கிராமத்தில் தேசிய காடு வளர்ப்பு தினத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

Published On 2022-04-15 09:22 GMT   |   Update On 2022-04-15 09:22 GMT
குரும்பூரை அடுத்த அங்கமங்கலம் கிராமத்தில் தேசிய காடு வளர்ப்பு தினத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
குரும்பூர்:

குரும்பூரை அடுத்த அங்கமங்கலம் கிராமத்தில் சிவன் கோவில் பின்புறம் உள்ள சாலையின் ஓரங்களில் அங்கமங்கலம் ஊராட்சி மன்றம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் 500 மரக்கன்றுகள் நடும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பாலமுருகன் வரவேற்று பேசினார். அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் முத்து சங்கர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவருமான டாக்டர் கென்னடி கலந்து கொண்டு 500 மரக்கன்றுகள் நடும் பணியை  தொடங்கி வைத்து பேசினார்.

இதில் பறவைகள் உண்ணும் பழவகை மரங்கள் நாவல் மரம், வேம்பு, ஆலமரம், அரச மரம், அத்தி மரம், மாமரம், கொய்யா மரம், போன்ற கனிதரும் மரங்கள் நடப்பட்டன.

இதற்கான ஏற்பாடுகளை அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் மற்றும் சமூக ஆர்வலர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News