தொழில்நுட்பம்
டிசிஎல் ஸ்மார்ட் டிவி

ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புதிய 4கே ஹெச்டிஆர் டிவி அறிமுகம் செய்த டிசிஎல்

Published On 2021-03-10 10:37 GMT   |   Update On 2021-03-10 10:37 GMT
டிசிஎல் நிறுவனம் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்ட புது டிவி சீரிஸ் மாடல்களை குறைந்த விலையில் வெளியிட்டு உள்ளது.

டிசிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் பி725 4கே ஹெச்டிஆர் டிவி சீரிசை அறிமுகம் செய்தது. இது இந்தியாவில் ஆண்ட்ராய்டு டிவி 11 கொண்ட முதல் டிவி சீரிஸ் ஆகும். 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என நான்கு வித அளவுகளில் இந்த சீரிஸ் கிடைக்கிறது.

புதிய டிசிஎல் பி725 சீரிஸ் மாடல் ஸ்டாக் ஆண்ட்ராய்டு டிவி இன்டர்பேஸ் மற்றும் டிசிஎல் நிறுவனத்தின் கஸ்டம் லான்ச்சர் என இரு மென்பொருள்களில் இயங்குகிறது. இந்த டிவி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 7 ஆயிரத்துக்கும் அதிக கேம்களை இயக்கும் வசதி கொண்டுள்ளது.



மேலும் நெட்ப்ளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற ஸ்டிரீமிங் சேவைகள், பில்ட்-இன் குரோம்காஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஹெச்டிஆர், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆடியோ, MEMC தொழில்நுட்பம், வீடியோ கால் கேமரா, கூகுள் அசிஸ்டண்ட் வசதி உள்ளது. இத்துடன் பல்வேறு ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் வழங்கப்படுகிறது.

டிசிஎல் பி725 சீரிஸ் 43 இன்ச் மாடல் விலை ரூ. 41,990, 50 இன்ச் மாடல் விலை ரூ. 56,990, 55 இன்ச் மாடல் விலை ரூ. 62,990 என்றும் 65 இன்ச் மாடல் விலை ரூ. 89,990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News