வழிபாடு
சாரங்கபாணி கோவில் தேரோட்டத்தை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்த போது எடுத்தபடம்.

சாரங்கபாணி கோவிலில் இன்று நடந்த தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

Published On 2022-05-14 08:52 GMT   |   Update On 2022-05-14 08:52 GMT
கும்பகோணம் சாரங்க பாணி சுவாமி கோவில் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரைப் பெருவிழா கடந்த 6ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் இந்த திருக்கோவில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபரணம் பெற்றதாகும்.

முக்கிய விழாவான திருத்தேரோட்டம் இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணி அளவில் புகை நாச்சியாருடன் பெருமாள் தேரில்எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் சாரங்கா சாரங்கா என வடம் பிடித்து இழுத்தனர்.
Tags:    

Similar News