ஆன்மிகம்
தாணுமாலயசாமி கோவிலில் மார்கழி திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது

Published On 2020-12-22 04:49 GMT   |   Update On 2020-12-22 04:49 GMT
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் மார்கழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி பெருந்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான மார்கழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவானது தொடர்ந்து 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.

விழாவையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு மாணிக்கவாசகர் பூஜை, 9 மணிக்கு கொடி பட்டத்தை மேள தாளத்துடன் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் சென்று மீண்டும் கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், 9.40 மணிக்கு மேள தாள பஞ்ச வாத்தியம், வெடி முழக்கத்துடன் தாணுமாலயன் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடி பட்டத்தை தெற்கு மண் மடம் பிரதீபன் நம்பூதிரி கொடி ஏற்றினார்.

தொடர்ந்து கொடி பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தேர்களுக்கு கால் நாட்டு வைபவம், ரத வீதியை சுற்றி திருமுறை ஊர்வலம் ஆகியவை நடந்தது.

கொடியேற்று விழா நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அழகேசன், சதாசிவம், மாவட்ட விவசாய அணி பொருளாளர்ஆ.கோ.ஆறுமுகம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சுகுமாரன், இணைச்செயலாளர் நாகசாயி, ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கந்தன், ஒன்றிய செயலாளர் குமரகுரு, பேரூர் செயலாளர் குமார், கிளைச் செயலாளர் மணி, நிர்வாகிகளான கே.சி.யு.மணி, மணிகண்டன், கலா, குருசாமி, செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், கன்னியாகுமாரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் சத்திய தாஸ் மற்றும் பக்தர்கள் சங்க நிர்வாகிகளும், இந்து இயக்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

9-ம் திருவிழாவான 29-ந்தேதி காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதில், சாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய 3 தேர்கள் உலா வருகின்றன. தேரோட்ட நிகழ்ச்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் அரவிந்த், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

அன்று இரவு 12 மணிக்கு சப்தாவரணம் காட்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனம், இரவு 9மணிக்கு மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும் இணைந்து செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News