செய்திகள்
ரெயில்

நாகர்கோவிலில் இருந்து சென்னை, கோவைக்கு ரெயில்கள் இயக்கம்

Published On 2021-06-03 10:23 GMT   |   Update On 2021-06-03 10:23 GMT
தெற்கு ரெயில்வேயில் ரெயில்களின் சில சேவைகள் மீண்டும் தொடங்குகிறது. மேலும் சில ரெயில்கள் தற்காலிக ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது.
நாகர்கோவில்:

தெற்கு ரெயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயில் ரெயில்களின் சில சேவைகள் மீண்டும் தொடங்குகிறது. மேலும் சில ரெயில்கள் தற்காலிக ரத்து நீட்டிப்பு செய்யப்படுகிறது. சேவையை தொடங்குகின்ற ரெயில்களுக்கு முன்பதிவுகள் தொடர்ந்து நடத்தப்படும். ரெயில் எண்.06336 நாகர்கோவில் சந்திப்பு-காந்திதாம் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06335 காந்தி தாம் சந்திப்பு-நாகர்கோவில் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கத்தை தொடங்குகின்றன.

மேலும் ரெயில் எண்.06861 புதுச்சேரி-கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06862 கன்னியாகுமரி-புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06063 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சந்திப்பு வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.06064 நாகர்கோவில் சந்திப்பு-சென்னை எழும்பூர் வாராந்திர சிறப்பு ரெயில், ரெயில் எண்.02668 கோயம்புத்தூர் சந்திப்பு- நாகர்கோவில் சந்திப்பு-சிறப்பு ரெயில், ரெயில் எண்.02667 நாகர்கோவில் சந்திப்பு-கோயம்புத்தூர் சந்திப்பு சிறப்பு ரெயில் ஆகியன இயக்கத்தை தொடங்கி உள்ளன.

ரெயில் எண்.06127 சென்னை எழும்பூர்-குருவாயூர் சிறப்பு ரெயில் திருவனந்தபுரம்-சென்ட்ரல் குருவாயூர் இடையே ஜூன் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரம் சென்ட்ரல் வரை வழக்கமான கால அட்டவணையில் இயக்கப்படும் ரெயில் எண்.06128 குருவாயூர் சென்னை எழும்பூர் தினசரி சிறப்பு ரெயில் தற்காலிகமாக குருவாயூர்-திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே ஜூன் 2 முதல் 16 வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருவனந்தபுரம் சென்ட்ரல் முதல் சென்னை எழும்பூர் வரை வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News